Thursday, November 12, 2009

நான்,கரியன்,மாடு,கபாலி அப்புறம் குற்றாலம்-1

     UG கல்லூரி நண்பர்களில்  எனக்கு மிகவும்  நெருக்கமானவர்கள்  மிகச்  சிலரே.  அவர்களில் மூவர் இன்னமும் நல்ல தொடர்பில் உள்ளவர்கள் இங்கே டைட்டில் இல்  குறிப்பிட்டுள்ள கரியன் alias சதீஷ், மாடு alias தினேஷ், கபாலி alias வெங்கடேஷ்.  நாங்கள் நால்வர் மற்றும் இன்னும் மூன்று நண்பர்களும் முதலாம் ஆண்டின் போது அறை தோழர்கள். கபாலி இப்போதும்   சென்னையில் என்னோடு அறை தோழன்.  நாங்கள் ஒரு நாளில் விடுதி மெஸ்ஸில் உக்காந்து வாய் நிறைய சிக்கன் சப்பாத்தியோடு பேசி கொண்டிருந்தோம். அப்போது திடீரென எல்லார் வீட்டுக்கும் எல்லாரும் ஒரு ரெண்டு நாட்கள் சென்று வருவதென்று. எல்லாருக்கும் அந்த டீல் புடிச்சிருந்தது.
        ஒரு சுப யோக வெள்ளிகிழமையில் என் வீட்டுக்கு கிளம்புவதென்று முடிவானது. மூன்று பேரும் அந்த வெள்ளிகிழமை லீவ் போட்டாகி விட்டாயிற்று. மூன்று பேருமே வேறு வேறு துறை என்பதினால் ஒன்றும் பிரச்சினை இல்லை.  கோவையில்  இருந்து தினமும் காலையில் கிளம்பி ஈரோட்டுக்கு காலை 9
மணிக்கு வரும் நாகர்கோவில் passenger இல் கிளம்பினோம். காலை உணவு ஈரோட்டிலயே முடித்துருந்தோம். Train இல் ஒவ்வொரு ஸ்டேஷன்கும்  வரும்  தின்பண்டங்கள்  எதையும் விட்டு வைக்கவில்லை. வேர்கடலையில் இருந்து கடம்பூர் போழி வரை எல்லாத்தையும் சாப்பிட்டோம். மதுரை நிலையத்தில் தான் மதிய உணவு. சாப்பிட்டு சாப்பிட்டு களைப்பாகி சிறிது நேரம் தூங்கினோம்.  ஆனால்   விருதுநகர் தாண்டியதும் சாத்தூர் கார சேவு ,கோவில்பட்டி கடலை மிட்டாய், உளுந்த வடை, பருப்பு வடை என்று எங்களை தூங்கவே விடவில்லை. நாங்களும் எங்கள் வாயை ஓய்வு எடுக்கவே  விடவில்லை.(இதன் பயனாக எங்கள் வீட்டுக்கு சென்றதும் shift முறையில் toilet போய்ட்டு வந்தது தனி கதை).
      அது போக நாங்கள் சென்றது ஒரு passenger train  என்பதால் அங்கங்கே signal கு என்று பல ரயில் நிலையங்களில் ரொம்ப நேரம் நின்று தான் சென்றது. ஒரு வழியாக நெல்லை வந்து இரவு  8.30 க்கு சேர்ந்தோம். அங்கிருந்து வீட்டிற்கு போன் பண்ணி நாங்கள் ஒரு 10.30 க்குள் வந்து விடுவோம் என்று சொல்லி விட்டேன். கடம்பூர் போழிக்கு பிறகு நாங்கள் எதுவுமே(அடுத்த 2  மணி நேரத்தில்)சாப்பிடாததால் பயங்கரமாக(????) பசி எடுத்தது எல்லாருக்கும். இருந்தாலும் அம்மா சாப்பிடாமல்  வீட்டுக்கு வந்து விடுங்கள் வீட்டில் தோசை சாப்பிட்டு கொள்ளலாம் என்று போனில் சொல்லி விட்டதால் சாப்பிடாமல் ஊருக்கு(சுரண்டைக்கு) பஸ்சில் கிளம்பினோம். எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக 10 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம். சிபி வந்து பாசமாக ஓடி வந்து என் முகம் எல்லாம் நக்கி விட்டது. கையை சும்மா செல்லமா கடிக்கிறது. கூட வந்தவங்களை எல்லாம் ஒரு மாதிரி லுக்  விட்டுட்டு போய்டுச்சு.(ஆனா அதுக்கு தினேஷ் மேல மட்டும் ஒரு கண்ணு இருந்துச்சு. அவனை பார்த்தாலே அவன் காலை வந்து கட்டிக்கிட்டு ரொமான்சு பண்ணுச்சு. அதை பார்த்தாலே அவன் மிரண்டு ஓடிகிட்டு இருந்தான். சிபி அவனை பார்த்தாலே தெறிச்சு ஓடி வந்து கட்டி புடிச்சுகுது. அவங்களுக்குள்ள நல்லா chemistry போல.)
     வந்ததும் அடுத்த வேலையா தோசை திண்ணிகளா ஆகிட்டோம். அக்கா எல்லாம் மிரண்டுட்டா. சும்மா சாப்பிட ஆரம்பிச்சா, ஆளுக்கு  6,7  னு சாப்ட்டா அவ பாவம் என்ன செய்வா???  அப்பா அம்மா எல்லாம் மிஞ்சி போனா 3  இல்லாட்டி  4  சாப்பிடுவாங்க. இங்க நாங்க இந்த லெவெல்ல  போறத பார்த்து  நான்  இப்படி  எல்லாம் கூட சாப்பிடுவேனான்னு மிரண்டு போய் பார்க்கிறா. ஒரு வழியா இரவு சாப்பாடும் நல்லா படியா முடிஞ்சது. அப்பா அம்மா அக்கா கூட உக்காந்து எல்லாரும் பேசிட்டு நாங்க எல்லாரும் மாடிக்கு படுக்க போய்ட்டோம். ஆனா ஒரு முழு நாள் பயணத்திற்கு அப்புறமும் எங்களுக்கு தூக்கம் வரல. மாடில இருந்த VCP ல Cliffhanger, Outbreak னு  ரெண்டு படம் பார்த்துட்டு தான் தூங்கினோம்.
       அடுத்த நாள் காலையில கொஞ்சம் சீக்கிரமா 8 மணிக்கு எல்லாம் எந்திருச்சு குற்றாலம் கிளம்ப ஆயத்தம் ஆனோம். (அது தானே எங்கள் ட்ரிப்பின் ultimate agenda...) காலை உணவை முடித்து கொண்டு( உணவு முக்கியம் அல்லவா...) அப்பா கிளம்பும் போது, மெயின் அருவில தண்ணி விழலயாம், அதனால நீங்க ஐந்தருவி போங்கன்னு சொன்னாங்க. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை? இல்லையா? அதனால நாங்க நேரா குற்றாலம் போய் பஸ்ஸில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில்( நாங்க போன நேரம் சீசன் நேரம் இல்லையென்பதால் பஸ் எல்லாம் இல்லை) ஐந்தருவி போய் சேர்ந்தோம். ஆனால் என்ன கொடுமை என்றால் அங்கேயும் மூன்று அருவிகளில் தண்ணீரே இல்லை. விழும் இரண்டு அருவிகளிலும் கூட்டம் முண்டியடித்து கொண்டு  நிற்கிறது. இது ஆவறதில்லை கிளம்பலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அருவியின் வலதுபுறமாக ஒரு சிறிய பாதையில்(அது பாதையே அல்ல) ஒரு நான்கைந்து பேர் இறங்கி கொண்டிருந்தார்கள். அந்த வழியாக அருவிக்கு மேலே வரும் நீரோடையை சென்றடைய முடியும் என்று என் லோக்கல் நண்பர்கள் கூறியது ஞாபகம்  வந்தது. சரி இன்று ட்ரை பண்ணிடலாம்னு கிளம்பிட்டோம்.
      நாங்கள் சென்ற நேரம் சீசன் நேரம் இல்லை என்பதால் போலீஸ் யாரும் இல்லை இருந்திருந்தால் நாங்கள் மேலே போயிருக்க முடியாது. மேலேறும் வழி சிறிது அல்ல ரொம்பவே கஷ்டமான பாதை தான். எங்களிலயே மாடும் கபாலியும் தான் கொஞ்சம் பல்க்கா இருப்பானுங்க. ரெண்டு பேரும் துஸ் புஸ்ஸுன்னு ஒரு வழியாக ஏறிட்டோம். யாருமே ரொம்ப வராத இடம் என்பதால் ரொம்ப நீட்டா இருந்தது. நாங்கள் சில பல பலகாரங்கள் மற்றும் சில பல சரக்குகள் கொண்டு போயிருந்தமையால் அவைகளை காலி செய்ய ஆரம்பித்தோம் (இங்கேயுமா டா?????). அவைகளில் பாதி அந்த புடுங்கி குரங்குகளுக்கு போய் விட்டது. மாடும் கரியனும் ஆளுக்கு ஒரு பீர் அடிச்சாங்க. நானும் கபாலியும்  பலகாரங்களை காலி பண்ணோம். அப்புறம் அங்கே ஓடி வந்த ஆற்றில் எருமைகளை விட மோசமாக கலக்கி விளையாடி சிறு பள்ளம் போன்ற ஒரு இடத்தில விழும் தண்ணீரில் விழுந்து புரண்டு ஒரு வழியாக குளித்து(?????) முடித்தோம். இப்போது எங்களுக்கு பசிக்க ஆரம்பித்து இருந்தது. சரி இறங்கலாம் என்று இறங்க ஆரம்பித்த போது தான் தெரிந்தது நாங்கள் எவ்வளவு  மோசமான  பாதையில் ஏறி வந்திருந்தோம் என்று. கீழே இறங்கும் போது மாடு படுத்தி எடுத்து விட்டான். ஒரு இடத்தில் தொங்கி கொண்டு இருக்கும் ஆல விழுதை தான் பிடித்து இறங்க வேண்டும். அங்கே மாடும் கபாலியும் பண்ணிய  காமெடியில் என்னால் நிற்க கூட முடியவில்லை.  எப்படியும்  ஒருவனை  இன்று  மருத்துவமனைக்கு  கூட்டி செல்ல வேண்டும், எந்த டாக்டர் கிட்ட  போகலாம் என்றெல்லாம்  நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.   ஒரு வழியாக தொங்கி, உருண்டு, பல்டி அடித்து, விழுந்து எந்திருச்சு கீழே இறங்கி விட்டோம்.  இறங்கியதும் நேராக சென்றது அங்கே இருந்த பழக்கடைக்கு...

1 comment:

vengi said...

மறக்க முடியலடா நண்பா ......... இன்னும் எங்கோ நம் வீட்டு தோசை வாசம் அடிப்பது போல் உள்ளது.... அக்கா கிட்ட சொல்லி பார்சல் அனுப்ப சொல்லுடா ...............

Post a Comment