ஒரு வழியாக ஐந்தருவியில் குளித்து(????) முடித்து, பழக்கடையில் சில பேர் தெரியாத பழங்களை எல்லாம் உள்ளே தள்ளி அப்படியே அடுத்து எங்கு செல்லலாம் என்று plan போட்டோம். மணி அப்போது 12 கூட ஆகவில்லை. அதனால் மெயினருவிக்கு சென்று அங்கு எதாவது ஹோட்டலில் சாப்பாடு (சாப்பாடு முக்கியம் அமைச்சரே...) வாங்கி கொண்டு செண்பகதேவி அருவிக்கு செல்வதென்று முடிவானது. ஐந்தருவியில் இருந்து மறுபடியும் ஆட்டோவில் மெயினருவிக்கு செல்லும் வழியில் வந்து இறங்கினோம்.
அங்கிருந்து எங்கள் செண்பகதேவி அருவி பயணம் தொடங்கியது. ஒரு 4 அல்லது 5 KM தூரம் இருக்கும். முழுவதுமே மலை மீது தான் செல்ல வேண்டும். ஒரு நல்ல ட்ரெக்கிங் அனுபவம் தான் எல்லாருக்கும். இப்போது மேலே ஏறுவதற்கு எல்லாருமே மிகவும் திணறினோம். ஆங்காங்கே நின்று இளைப்பாறி தான் ஏற முடிந்தது. போகும் வழியில் தான் சிற்றருவி வரும். எல்லாம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் கிடந்தது. ஒரு வழியாக முதல் stage ஆன மெயினருவியின் மேற்புறத்திற்கு சென்றடைந்தோம். இந்த இடம் வரை ஆறு போல் ஓடி வந்து இங்கிருந்து தான் அருவியாக பாய்கிறது. இங்கிருந்து பார்த்தால் குற்றாலம் மட்டுமல்ல தென்காசி மற்றும் தூரமாக உள்ள அத்தனை ஊர்களும் தெரியும்.
குற்றால அருவி நேரடியாக(அதாவது ஒரே fall இல்) தரையை தொடுவது இல்லை. முதலில் அது பொங்குமாங்கடல் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய size நீச்சல் குளம் போன்ற ஒரு இடத்தில் விழுந்தே மீண்டும் தரையை தொடும். இந்த அமைப்பினால் தான் மெயினருவி இன்றும் குளிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான அருவியாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் அதிகம் வரும் நேரங்களில் அடித்து வரப்படும் கற்கள், சிறு கிளைகள் எல்லாம் இங்கயே தடுக்கப்பட்டு விடும். மேலிருந்து பார்க்க மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கும். நிறைய பேர் தவறி விழுந்து இறந்து போய் இருகிறார்கள்.
நாங்கள் இந்த இடத்திற்கு போய் சேர்ந்த உடன் தினேஷ் (மாடு) க்கு அப்படி என்ன ஒரு வெறி வந்ததென்று தெரியவில்லை. அவன் பாட்டுக்கு தட தடவென்று கீழே போட்டிருந்த தடுப்பை பார்த்து ஓட ஆரம்பித்தான். நான் அவனை பார்த்து கத்தறேன், டேய்ய் பார்த்து டா... என்று. அவன் ஓடிய வேகத்துக்கு போய் அந்த தடுப்பை பிடித்தால் அந்த தடுப்பு தாங்குமா என்று வேறு எனக்கு அந்த நேரம் தோன்றி தொலைத்தது. ஒரு வழியாக அந்த தடுப்பை பிடித்து நின்று விட்டான். யாரும் அதை பார்த்திருந்தால் எவனோ சாவ போறான்டா இன்னிக்கு என்று நினைத்து இருப்பார்கள். எனக்கு வாயில் இருந்து அத்தனை கெட்ட வார்த்தைகள் வந்து விட்டது. எனக்கே அவ்வளவு கெட்ட வார்த்தை தெரியும்ன்றது எனக்கே அபோ தான் தெரிஞ்சது. திட்டி தீர்த்து விட்டேன் அவனை. கரியனும் கபாலியும் அவர்கள் பங்குக்கு நாலு போடு போட்டார்கள். அப்புறம் தான் தெரிந்தது அவன் வேண்டும் என்றே ஓடவில்லை சும்மா இறங்கி போக ட்ரை பண்ணிய போது balance பண்ண முடியாமல் ஓடினான் என்று.
அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் சுத்தமாக ஆள் நடமாட்டமே இல்லை. நாங்களும் காடும் குரங்குகளும் மட்டும் தான். வாங்கி வந்த சாப்பாடு பார்சல் வாசனை கொஞ்சம் பசியை தூண்டவே சாப்பிட்டு விட்டு ஏறலாம் என்று சாப்பிட ஒரு இடத்தை தேடினோம். ஏற்கனவே காடுகளில் தண்ணீர் இல்லாமல் இரை இல்லாமல் குரங்கு கூட்டம் கொலை வெறியில் பார்சல் கொண்டு வருபவர்களை எல்லாம் துரத்தி கொண்டிருந்தது. இதை பார்த்து உஷாரான நாங்கள் ஒரு இடத்தை select பண்ணோம். தண்ணீருக்கு நடுவில் ஒரு பெரிய பாறையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். பசி மிகுதியில் நாங்கள் சாதத்தை அள்ளி வாயில் திணித்து கொண்டு இருந்தோம். தண்ணீருக்குள் வர முடியாமல் குரங்குகள் எல்லாம் வெளியே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததை மிகவும் மகிழ்ச்சியாய் நாங்கள் வேடிக்கை பார்த்தோம். ஆனால் எங்களுக்கு மேலே இருந்த பெரிய மரக்கிளையை நாங்கள் கவனிக்காமல் விட்டு விட்டோம். அதில் இருந்து குதித்தது ஒரு தடிக்குரங்கு. ஒரு சிறு போரே நடந்தது அதற்கு மேல். வேறு எது என்றாலும் விட்டு கொடுத்து செல்ல கூடிய நாங்கள் அந்த பசித்த வேளையில் எங்கள் சாப்பாடை பறிக்க பார்த்ததும் வெறி கொண்டு எழுந்தோம். நாங்கள் போட்ட கூச்சலில், நாங்கள் ஆடிய ஆட்டத்தில், நாங்கள் அந்த பெரிய பாறையில் ஓடிய ஓட்டத்தில் அந்த குரங்கு மிரண்டு தண்ணீரில் எல்லாம் விழுந்து எந்திருச்சு ஓடியது. சுத்தி நின்ற மற்ற குரங்குகள் அதற்கு பின்னும் எங்களிடம் வந்திருக்குமா என்ன? இன்னொரு ஆச்சரியமான விஷயம், அதன் பின் நாங்கள் எந்த குரங்கையும் பார்க்கவில்லை.
ஒரு சின்ன தடுப்பணை தாண்டி ஒரு ஒற்றையடி பாதை போல நீண்டு செல்லும் பாதையில் ஒரு வழியாக செண்பகாதேவி அருவிக்கு வந்து சேர்ந்தோம். கரையில் அழகிய கோவில், தடாகம் போன்ற அமைப்பு, அந்த தடாகத்தில் வந்து விழும் அருவி என அந்த இடம் ரொம்ப ரம்மியமாக இருந்தது. இங்கு நேரடியாக அருவியில் குளிக்க முடியாது. ஒரு ஓரமாக தான் சென்று கவனமாக குளிக்க முடியும். நல்ல ஆழமான தடாகம் எனவே ரொம்பவே ஜாக்கிரதையா குளிச்சோம். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல ஆட்டம் போட்டுட்டு எங்களுக்கே போதும்னு தோணி கிளம்பினோம். ஆனால் சீசன் நேரங்களில் வந்தால் இவ்வளவு free ஆ எந்த அருவிகள்ளையும் enjoy பண்ண முடியாது.
வந்த பாதையிலையே கீழே இறங்கினோம். வரும் வழியில் என் கேமரா strap கழன்று, நாங்கள் வேகமா இறங்கிட்டு இருக்கோம், கேமரா எங்களுக்கு முன்னாடி உருண்டு ஓடிட்டு இருக்கு. சரி தான், இன்னிக்கு அது சுக்கு நூறா உடஞ்சிரும், அப்பா கிட்ட மண்டகப்படி வாங்க போறேன்னு நினச்சேன். ஆனா பரவாயில்லை, ஒன்னும் ஆகல.. டாப் மட்டும் எகிருடுச்சு, அதையும் தென்காசில film develop பண்ற இடத்துல சரி பண்ணியாச்சு. கீழே மெயினருவி பஜார்ல அல்வா, சிப்ஸ் சாப்பிட்டுட்டு வீட்டுக்கும் கொஞ்சம் வாங்கிட்டு கிளம்பினோம். தென்காசில போட்டோ develop பண்ண குடுத்துட்டு அப்போ கிடைச்ச 1 மணி நேர gap ல காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் போய்ட்டு வந்துட்டோம். வீட்டுக்கு வந்து சேரும் போது வழக்கம் போலவே எல்லாருக்கும் நல்ல பசி......
Friday, November 13, 2009
Thursday, November 12, 2009
நான்,கரியன்,மாடு,கபாலி அப்புறம் குற்றாலம்-1
UG கல்லூரி நண்பர்களில் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மிகச் சிலரே. அவர்களில் மூவர் இன்னமும் நல்ல தொடர்பில் உள்ளவர்கள் இங்கே டைட்டில் இல் குறிப்பிட்டுள்ள கரியன் alias சதீஷ், மாடு alias தினேஷ், கபாலி alias வெங்கடேஷ். நாங்கள் நால்வர் மற்றும் இன்னும் மூன்று நண்பர்களும் முதலாம் ஆண்டின் போது அறை தோழர்கள். கபாலி இப்போதும் சென்னையில் என்னோடு அறை தோழன். நாங்கள் ஒரு நாளில் விடுதி மெஸ்ஸில் உக்காந்து வாய் நிறைய சிக்கன் சப்பாத்தியோடு பேசி கொண்டிருந்தோம். அப்போது திடீரென எல்லார் வீட்டுக்கும் எல்லாரும் ஒரு ரெண்டு நாட்கள் சென்று வருவதென்று. எல்லாருக்கும் அந்த டீல் புடிச்சிருந்தது.
ஒரு சுப யோக வெள்ளிகிழமையில் என் வீட்டுக்கு கிளம்புவதென்று முடிவானது. மூன்று பேரும் அந்த வெள்ளிகிழமை லீவ் போட்டாகி விட்டாயிற்று. மூன்று பேருமே வேறு வேறு துறை என்பதினால் ஒன்றும் பிரச்சினை இல்லை. கோவையில் இருந்து தினமும் காலையில் கிளம்பி ஈரோட்டுக்கு காலை 9
மணிக்கு வரும் நாகர்கோவில் passenger இல் கிளம்பினோம். காலை உணவு ஈரோட்டிலயே முடித்துருந்தோம். Train இல் ஒவ்வொரு ஸ்டேஷன்கும் வரும் தின்பண்டங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. வேர்கடலையில் இருந்து கடம்பூர் போழி வரை எல்லாத்தையும் சாப்பிட்டோம். மதுரை நிலையத்தில் தான் மதிய உணவு. சாப்பிட்டு சாப்பிட்டு களைப்பாகி சிறிது நேரம் தூங்கினோம். ஆனால் விருதுநகர் தாண்டியதும் சாத்தூர் கார சேவு ,கோவில்பட்டி கடலை மிட்டாய், உளுந்த வடை, பருப்பு வடை என்று எங்களை தூங்கவே விடவில்லை. நாங்களும் எங்கள் வாயை ஓய்வு எடுக்கவே விடவில்லை.(இதன் பயனாக எங்கள் வீட்டுக்கு சென்றதும் shift முறையில் toilet போய்ட்டு வந்தது தனி கதை).
அது போக நாங்கள் சென்றது ஒரு passenger train என்பதால் அங்கங்கே signal கு என்று பல ரயில் நிலையங்களில் ரொம்ப நேரம் நின்று தான் சென்றது. ஒரு வழியாக நெல்லை வந்து இரவு 8.30 க்கு சேர்ந்தோம். அங்கிருந்து வீட்டிற்கு போன் பண்ணி நாங்கள் ஒரு 10.30 க்குள் வந்து விடுவோம் என்று சொல்லி விட்டேன். கடம்பூர் போழிக்கு பிறகு நாங்கள் எதுவுமே(அடுத்த 2 மணி நேரத்தில்)சாப்பிடாததால் பயங்கரமாக(????) பசி எடுத்தது எல்லாருக்கும். இருந்தாலும் அம்மா சாப்பிடாமல் வீட்டுக்கு வந்து விடுங்கள் வீட்டில் தோசை சாப்பிட்டு கொள்ளலாம் என்று போனில் சொல்லி விட்டதால் சாப்பிடாமல் ஊருக்கு(சுரண்டைக்கு) பஸ்சில் கிளம்பினோம். எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக 10 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம். சிபி வந்து பாசமாக ஓடி வந்து என் முகம் எல்லாம் நக்கி விட்டது. கையை சும்மா செல்லமா கடிக்கிறது. கூட வந்தவங்களை எல்லாம் ஒரு மாதிரி லுக் விட்டுட்டு போய்டுச்சு.(ஆனா அதுக்கு தினேஷ் மேல மட்டும் ஒரு கண்ணு இருந்துச்சு. அவனை பார்த்தாலே அவன் காலை வந்து கட்டிக்கிட்டு ரொமான்சு பண்ணுச்சு. அதை பார்த்தாலே அவன் மிரண்டு ஓடிகிட்டு இருந்தான். சிபி அவனை பார்த்தாலே தெறிச்சு ஓடி வந்து கட்டி புடிச்சுகுது. அவங்களுக்குள்ள நல்லா chemistry போல.)
வந்ததும் அடுத்த வேலையா தோசை திண்ணிகளா ஆகிட்டோம். அக்கா எல்லாம் மிரண்டுட்டா. சும்மா சாப்பிட ஆரம்பிச்சா, ஆளுக்கு 6,7 னு சாப்ட்டா அவ பாவம் என்ன செய்வா??? அப்பா அம்மா எல்லாம் மிஞ்சி போனா 3 இல்லாட்டி 4 சாப்பிடுவாங்க. இங்க நாங்க இந்த லெவெல்ல போறத பார்த்து நான் இப்படி எல்லாம் கூட சாப்பிடுவேனான்னு மிரண்டு போய் பார்க்கிறா. ஒரு வழியா இரவு சாப்பாடும் நல்லா படியா முடிஞ்சது. அப்பா அம்மா அக்கா கூட உக்காந்து எல்லாரும் பேசிட்டு நாங்க எல்லாரும் மாடிக்கு படுக்க போய்ட்டோம். ஆனா ஒரு முழு நாள் பயணத்திற்கு அப்புறமும் எங்களுக்கு தூக்கம் வரல. மாடில இருந்த VCP ல Cliffhanger, Outbreak னு ரெண்டு படம் பார்த்துட்டு தான் தூங்கினோம்.
அடுத்த நாள் காலையில கொஞ்சம் சீக்கிரமா 8 மணிக்கு எல்லாம் எந்திருச்சு குற்றாலம் கிளம்ப ஆயத்தம் ஆனோம். (அது தானே எங்கள் ட்ரிப்பின் ultimate agenda...) காலை உணவை முடித்து கொண்டு( உணவு முக்கியம் அல்லவா...) அப்பா கிளம்பும் போது, மெயின் அருவில தண்ணி விழலயாம், அதனால நீங்க ஐந்தருவி போங்கன்னு சொன்னாங்க. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை? இல்லையா? அதனால நாங்க நேரா குற்றாலம் போய் பஸ்ஸில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில்( நாங்க போன நேரம் சீசன் நேரம் இல்லையென்பதால் பஸ் எல்லாம் இல்லை) ஐந்தருவி போய் சேர்ந்தோம். ஆனால் என்ன கொடுமை என்றால் அங்கேயும் மூன்று அருவிகளில் தண்ணீரே இல்லை. விழும் இரண்டு அருவிகளிலும் கூட்டம் முண்டியடித்து கொண்டு நிற்கிறது. இது ஆவறதில்லை கிளம்பலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அருவியின் வலதுபுறமாக ஒரு சிறிய பாதையில்(அது பாதையே அல்ல) ஒரு நான்கைந்து பேர் இறங்கி கொண்டிருந்தார்கள். அந்த வழியாக அருவிக்கு மேலே வரும் நீரோடையை சென்றடைய முடியும் என்று என் லோக்கல் நண்பர்கள் கூறியது ஞாபகம் வந்தது. சரி இன்று ட்ரை பண்ணிடலாம்னு கிளம்பிட்டோம்.
நாங்கள் சென்ற நேரம் சீசன் நேரம் இல்லை என்பதால் போலீஸ் யாரும் இல்லை இருந்திருந்தால் நாங்கள் மேலே போயிருக்க முடியாது. மேலேறும் வழி சிறிது அல்ல ரொம்பவே கஷ்டமான பாதை தான். எங்களிலயே மாடும் கபாலியும் தான் கொஞ்சம் பல்க்கா இருப்பானுங்க. ரெண்டு பேரும் துஸ் புஸ்ஸுன்னு ஒரு வழியாக ஏறிட்டோம். யாருமே ரொம்ப வராத இடம் என்பதால் ரொம்ப நீட்டா இருந்தது. நாங்கள் சில பல பலகாரங்கள் மற்றும் சில பல சரக்குகள் கொண்டு போயிருந்தமையால் அவைகளை காலி செய்ய ஆரம்பித்தோம் (இங்கேயுமா டா?????). அவைகளில் பாதி அந்த புடுங்கி குரங்குகளுக்கு போய் விட்டது. மாடும் கரியனும் ஆளுக்கு ஒரு பீர் அடிச்சாங்க. நானும் கபாலியும் பலகாரங்களை காலி பண்ணோம். அப்புறம் அங்கே ஓடி வந்த ஆற்றில் எருமைகளை விட மோசமாக கலக்கி விளையாடி சிறு பள்ளம் போன்ற ஒரு இடத்தில விழும் தண்ணீரில் விழுந்து புரண்டு ஒரு வழியாக குளித்து(?????) முடித்தோம். இப்போது எங்களுக்கு பசிக்க ஆரம்பித்து இருந்தது. சரி இறங்கலாம் என்று இறங்க ஆரம்பித்த போது தான் தெரிந்தது நாங்கள் எவ்வளவு மோசமான பாதையில் ஏறி வந்திருந்தோம் என்று. கீழே இறங்கும் போது மாடு படுத்தி எடுத்து விட்டான். ஒரு இடத்தில் தொங்கி கொண்டு இருக்கும் ஆல விழுதை தான் பிடித்து இறங்க வேண்டும். அங்கே மாடும் கபாலியும் பண்ணிய காமெடியில் என்னால் நிற்க கூட முடியவில்லை. எப்படியும் ஒருவனை இன்று மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வேண்டும், எந்த டாக்டர் கிட்ட போகலாம் என்றெல்லாம் நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு வழியாக தொங்கி, உருண்டு, பல்டி அடித்து, விழுந்து எந்திருச்சு கீழே இறங்கி விட்டோம். இறங்கியதும் நேராக சென்றது அங்கே இருந்த பழக்கடைக்கு...
Tuesday, November 3, 2009
பள்ளி to கல்லூரி
இன்னும் 4 நாட்கள் இருந்தது காலேஜ் திறக்க. ஊருக்கு வந்து நண்பர்கள் எல்லார்கிட்டேயும் சொல்லி முடித்தாகி விட்டது.என் நெருங்கிய நண்பர்களில் பொன்ராஜ்,டொமினிக் எல்லாம் ஊரிலயே தான் கல்லூரி படிப்பை தொடர்ந்தார்கள். சந்தோஷ்,சங்கர் ஹோசூர் மற்றும் கோவையில். சரி... இப்போ போயி join பண்ணினா அப்புறம் எப்போ ஊருக்கு வர போறோம்.அதனால போடு ஒரு plan ன்னு அவசரமா Courtallam plan போட்டோம்.ஆனால் அந்த plan failure.. காலேஜ்கு கிளம்பும் போது தான் அக்கா,அம்மா எல்லாம் எவ்ளோ feel பண்ணிட்டு இருந்தாங்கன்னு தெரிஞ்சது. அண்ணன் கூட போன்ல "காலேஜ் லைப்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.புது நண்பர்கள் கூட எல்லாம் கவனமா பழகு எல்லாத்தையும் விட கொஞ்சம் படி" அப்படின்னு அட்வைஸ்.எங்க வீட்டு சிபி(எங்க pet dog... அதை நாய்ன்னு அம்மாவும் சரி அப்பாவும் சரி சொல்லவே மாட்டாங்க.நானெல்லாம் அதோட அண்ணனாம்.. அது சரி...) கூட பயங்கரமா பீல் பண்ணி என் கூட கொழஞ்சிட்டு இருக்கு... .ஆனா என் mind ல ஓடிட்டு இருந்தது எல்லாம் புது இடம் புது காலேஜ் புது நண்பர்கள் புது enjoyment அதெல்லாம் விட புது பயணம். சுரண்டைல இருந்து திருச்செங்கோடு 10Hrs ஆகும்.ஒரு முழு இரவு பயணம்.அதுவே எனக்கு ரொம்ப புடிச்சது. கல்லூரி படிப்பு எங்கே நமது ஊரு சுற்றும் ஆசையில் மண் அள்ளி போட்டு விடுமோனு பயந்திட்டு இருந்தப்போ "அஞ்சேல்... நீ உனது கல்லூரிக்கு செல்வதே ஊர் சுற்றுவதின் ஒரு அங்கம் தான்" என்றது அசரிரீ.
அப்பாவும் கூட வராங்க.இரவெல்லாம் பஸ் பயணம். அப்பா restless ஆக இருந்தாங்க.தெரிஞ்சது.காலையில hostel போய் சேர்ந்து காலேஜ்கு கிளம்பறேன்.அன்னிக்கு சும்மா induction மாதிரி தான்.Claases லாம் எதுவும் நடக்கல. அப்பா hostelல ஓய்வு எடுத்துட்டு சாயங்காலம் அப்பாவை பஸ் ஸ்டாண்டில் விட நானும் ஈரோடு போனேன்.அப்போ தான் பாக்கறேன் அப்பாவின் கண்களில் கண்ணீரா பொங்கிட்டு இருக்கு.அப்பா அழுது அப்போ தான் நான் பார்க்கறேன்.நல்ல உடம்ப பார்த்துக்கோ, நல்லா படின்னு அவங்களால சொல்லி முடிக்க முடியல.எனக்கு அப்போ தான் நாம வீட்ட விட்டு பிரிஞ்சு வந்துடோம் இனிமேல லைப் இப்படி தான் அப்படின்ற உண்மை உறைக்குது.நானும் அந்த டைம் ல ரொம்ப அழுதிட்டேன். வீட்டுக்கு போன் பண்ணி அம்மா அக்கா கிட்டே பேசும் போதும் ஒரே அழுகையா தான் வந்துச்சு.அடக்கிட்டு, "அப்பா கிளம்பிட்டாங்க காலைல அப்பா வந்த உடனே hostel நம்பர்கு கூப்ப்டுங்க"னு சொல்லிட்டு வச்சிட்டேன்.
இது நடந்தது ஒரு புதன் கிழமை. வெள்ளிகிழமை வந்தது.சனி,ஞாயிறு holidayன்னு வெள்ளிகிழமை சாயங்காலம் circular வந்தது. சனிக்கிமை காலைல நான் வீட்ல இருந்தேன்.....
Monday, November 2, 2009
புளியங்குடியும் நானும்...
என் சிறு வயதின் ஊர் சுற்றல்கள் எல்லாம் என் அம்மாவின் ஊராகிய புளியங்குடிக்கும் என் ஊராகிய (அப்பா ஊரு தான் எல்லாருக்கும் சொந்த ஊர் இல்லையா??) சுரண்டைக்கும் இடையே தான் நிகழும். எனக்கு புளியங்குடிக்கு போவது என்றால் அவ்வளவு இஷ்டம் ஏன் என்றால் அங்கே சென்று விட்டால் அம்மாவும் சரி அப்பாவும் சரி அவ்வளவு கெடு பிடியாக இருக்க மாட்டார்கள்... எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் எனக்கு விழ போகும் அடிகளை மாமாவோ இல்லை பெரியம்மாவோ இல்லை அண்ணன்கள் மாமா பையன்களோ தடுத்து விடுவார்கள் அல்லது குறைந்த பட்சம் குறைத்து விடுவார்கள்..
இது போகவும் எனக்கு ஏன் அங்கே போக பிடிக்கும் என்றால் அங்குள்ள வயல்களும் தோப்புகளும் தான்... இங்கே சுரண்டையை போல் வீட்டுக்கு அருகில் அல்லாமல் ஒரு ஆறு கிமீ செல்ல வேண்டும்... அவை எல்லாமே ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும்... அப்போதே எனக்கு மலையும் காடுகளும் பிடித்த விஷயமாகவே இருந்து வந்தன. காட்டுக்குள் உள்ள கருப்பசாமி கோவில் அங்கே ஓடி வரும் ஆறு என்று என்னை மகிழ்விக்கும் அத்தனையும் அங்கே இருந்தது. வருடம் ஒரு முறை குடும்பத்துடன் கருப்பசாமி கோவிலுக்கு போவது mandatory.. அம்மா பெரியம்மாக்கள் அத்தைகள் பாட்டிகள் அக்காமார்கள் எல்லாரும் சாமி கும்பிட்டு ஆடு வெட்டிய பின் அதை சுத்தம் செய்து சமையலில் மும்முரமாக இருப்பார்கள்... தாத்தாவில் ஆரம்பித்து குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.எத்தனை கேன்கள் இருந்தாலும் அது பத்தாது,ஒரே சத்த காடா இருக்கும்...
நானும் எனது அண்ணன் தம்பிகள் மாமா மக்கள் எல்லாரும் ஆற்றுக்கும் இறங்கி கும்மாளம் போட்டு கொண்டு இருப்போம்... அது தான் சிறு வயதின் எல்லாம்..
வேற என்ன வேண்டி இருக்கும் அப்போது??
புளியங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் இந்த வயல்களும் பின்னி பிணைந்தவை.அவர்களின் வயல் வேலைகள் சார்ந்தே அவர்களின் தினசரி வேலைகளும்.(அவர்கள் வயல் என்று சொல்ல மாட்டார்கள். காடு என்றே சொல்வார்கள்). தினமும் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஆறு மணிக்குள் வயலுக்கு போய் சேர்ந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள். எல்லார் வீட்டிலும் மாட்டு வண்டி இருக்கும்.. (இப்பொது டிராக்டர்). மாடு வண்டி எல்லாம் தயார் செய்து ஐந்து மணிக்கும் எல்லாம் கிளம்பி விடுவார்கள். சமையல்?? அது எல்லாம் காட்டில் தான்.அங்கயே பாத்திரம் பண்டம் எல்லாம் இருக்கும் பம்ப் செட்டில். வீட்டில் இருந்து அங்கே எடுத்து செல்ல படுவது அரிசி மட்டும் தான், சமயத்தில் அதுவும் அங்கயே தயார் செய்ய படும். காய்கறிகள்?? அங்கே இல்லாததா??
அம்மாவின் ஊரில் முக்கியமாக பயிரிட படுபவை எலுமிச்சையும் நெல்லும் தான்.நெற்பயிரின் வாசனையும் அந்த எலுமிச்சை தோப்புக்குள் நுழையும் பொது வீசும் வாசமும் போல் என்னை இன்னும் எந்த வாசனையும் வசீகரிக்கவில்லை.இன்றும் நான் பயன் படுத்தும் perfume, citrus/lemon based தான்...
என் பெரியம்மாவும் இரண்டு வருடம் முன் இறந்து விட்டார்கள். அக்கா அண்ணன்கள் எல்லாம் துபாய் பஹ்ரைன் என்று ஆளுக்கு ஒரு பக்கம்.. மாமா அத்தைகள் எல்லாம் சிறு குடும்ப பிரச்சினையில் சரியாக எங்கள் வீடுடன் பேசுவதில்லை.. இந்த வருடம் தீபாவளிக்கு என் நச்சரிப்பின் காரணமாக நானும் அம்மாவும் புளியங்குடிக்கு சென்றோம். நலம் எல்லாம் விசாரித்து விட்டு பாட்டியிடம் கேட்டேன், தோப்பு எல்லாம் எப்படி இருக்கு பாட்டி? என்று. உங்க மாமன்காரங்க தான் எல்லாத்தையும் வித்துட்டு இங்க ஊருக்குள்ள வீடு கட்ட மனைலா வாங்கி போட்ருக்காங்க.. இருக்க காட்டுலயும் இந்த வருஷம் தண்ணி இல்லாம நெல்லும் போடல.... சொல்லி விட்டு பாட்டி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்கள்.. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..
இது போகவும் எனக்கு ஏன் அங்கே போக பிடிக்கும் என்றால் அங்குள்ள வயல்களும் தோப்புகளும் தான்... இங்கே சுரண்டையை போல் வீட்டுக்கு அருகில் அல்லாமல் ஒரு ஆறு கிமீ செல்ல வேண்டும்... அவை எல்லாமே ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும்... அப்போதே எனக்கு மலையும் காடுகளும் பிடித்த விஷயமாகவே இருந்து வந்தன. காட்டுக்குள் உள்ள கருப்பசாமி கோவில் அங்கே ஓடி வரும் ஆறு என்று என்னை மகிழ்விக்கும் அத்தனையும் அங்கே இருந்தது. வருடம் ஒரு முறை குடும்பத்துடன் கருப்பசாமி கோவிலுக்கு போவது mandatory.. அம்மா பெரியம்மாக்கள் அத்தைகள் பாட்டிகள் அக்காமார்கள் எல்லாரும் சாமி கும்பிட்டு ஆடு வெட்டிய பின் அதை சுத்தம் செய்து சமையலில் மும்முரமாக இருப்பார்கள்... தாத்தாவில் ஆரம்பித்து குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.எத்தனை கேன்கள் இருந்தாலும் அது பத்தாது,ஒரே சத்த காடா இருக்கும்...
நானும் எனது அண்ணன் தம்பிகள் மாமா மக்கள் எல்லாரும் ஆற்றுக்கும் இறங்கி கும்மாளம் போட்டு கொண்டு இருப்போம்... அது தான் சிறு வயதின் எல்லாம்..
வேற என்ன வேண்டி இருக்கும் அப்போது??
புளியங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் இந்த வயல்களும் பின்னி பிணைந்தவை.அவர்களின் வயல் வேலைகள் சார்ந்தே அவர்களின் தினசரி வேலைகளும்.(அவர்கள் வயல் என்று சொல்ல மாட்டார்கள். காடு என்றே சொல்வார்கள்). தினமும் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஆறு மணிக்குள் வயலுக்கு போய் சேர்ந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள். எல்லார் வீட்டிலும் மாட்டு வண்டி இருக்கும்.. (இப்பொது டிராக்டர்). மாடு வண்டி எல்லாம் தயார் செய்து ஐந்து மணிக்கும் எல்லாம் கிளம்பி விடுவார்கள். சமையல்?? அது எல்லாம் காட்டில் தான்.அங்கயே பாத்திரம் பண்டம் எல்லாம் இருக்கும் பம்ப் செட்டில். வீட்டில் இருந்து அங்கே எடுத்து செல்ல படுவது அரிசி மட்டும் தான், சமயத்தில் அதுவும் அங்கயே தயார் செய்ய படும். காய்கறிகள்?? அங்கே இல்லாததா??
அம்மாவின் ஊரில் முக்கியமாக பயிரிட படுபவை எலுமிச்சையும் நெல்லும் தான்.நெற்பயிரின் வாசனையும் அந்த எலுமிச்சை தோப்புக்குள் நுழையும் பொது வீசும் வாசமும் போல் என்னை இன்னும் எந்த வாசனையும் வசீகரிக்கவில்லை.இன்றும் நான் பயன் படுத்தும் perfume, citrus/lemon based தான்...
என் பெரியம்மாவும் இரண்டு வருடம் முன் இறந்து விட்டார்கள். அக்கா அண்ணன்கள் எல்லாம் துபாய் பஹ்ரைன் என்று ஆளுக்கு ஒரு பக்கம்.. மாமா அத்தைகள் எல்லாம் சிறு குடும்ப பிரச்சினையில் சரியாக எங்கள் வீடுடன் பேசுவதில்லை.. இந்த வருடம் தீபாவளிக்கு என் நச்சரிப்பின் காரணமாக நானும் அம்மாவும் புளியங்குடிக்கு சென்றோம். நலம் எல்லாம் விசாரித்து விட்டு பாட்டியிடம் கேட்டேன், தோப்பு எல்லாம் எப்படி இருக்கு பாட்டி? என்று. உங்க மாமன்காரங்க தான் எல்லாத்தையும் வித்துட்டு இங்க ஊருக்குள்ள வீடு கட்ட மனைலா வாங்கி போட்ருக்காங்க.. இருக்க காட்டுலயும் இந்த வருஷம் தண்ணி இல்லாம நெல்லும் போடல.... சொல்லி விட்டு பாட்டி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்கள்.. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..
Subscribe to:
Posts (Atom)
