Friday, November 13, 2009

நான்,கரியன்,மாடு,கபாலி அப்புறம் குற்றாலம்-2

ஒரு வழியாக ஐந்தருவியில் குளித்து(????) முடித்து, பழக்கடையில் சில பேர் தெரியாத பழங்களை எல்லாம் உள்ளே தள்ளி அப்படியே அடுத்து எங்கு செல்லலாம் என்று plan  போட்டோம். மணி அப்போது 12 கூட ஆகவில்லை. அதனால் மெயினருவிக்கு சென்று அங்கு எதாவது ஹோட்டலில் சாப்பாடு (சாப்பாடு முக்கியம் அமைச்சரே...) வாங்கி கொண்டு செண்பகதேவி அருவிக்கு செல்வதென்று முடிவானது. ஐந்தருவியில் இருந்து மறுபடியும் ஆட்டோவில் மெயினருவிக்கு செல்லும் வழியில் வந்து இறங்கினோம்.
       அங்கிருந்து எங்கள் செண்பகதேவி அருவி பயணம் தொடங்கியது. ஒரு  4 அல்லது 5 KM  தூரம் இருக்கும். முழுவதுமே மலை மீது தான் செல்ல வேண்டும். ஒரு நல்ல ட்ரெக்கிங் அனுபவம் தான் எல்லாருக்கும். இப்போது மேலே ஏறுவதற்கு எல்லாருமே மிகவும் திணறினோம். ஆங்காங்கே நின்று இளைப்பாறி தான் ஏற முடிந்தது.  போகும்  வழியில் தான் சிற்றருவி வரும். எல்லாம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் கிடந்தது. ஒரு வழியாக முதல் stage ஆன மெயினருவியின் மேற்புறத்திற்கு சென்றடைந்தோம். இந்த இடம் வரை ஆறு போல் ஓடி வந்து இங்கிருந்து தான் அருவியாக பாய்கிறது. இங்கிருந்து பார்த்தால் குற்றாலம் மட்டுமல்ல தென்காசி மற்றும் தூரமாக உள்ள அத்தனை ஊர்களும் தெரியும்.
              குற்றால அருவி நேரடியாக(அதாவது ஒரே fall இல்) தரையை தொடுவது இல்லை. முதலில் அது பொங்குமாங்கடல் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய size நீச்சல் குளம் போன்ற ஒரு இடத்தில் விழுந்தே மீண்டும் தரையை தொடும். இந்த அமைப்பினால் தான் மெயினருவி இன்றும் குளிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான அருவியாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர்  அதிகம் வரும் நேரங்களில் அடித்து வரப்படும் கற்கள், சிறு கிளைகள் எல்லாம் இங்கயே தடுக்கப்பட்டு விடும்.  மேலிருந்து பார்க்க மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கும்.  நிறைய பேர் தவறி விழுந்து இறந்து போய் இருகிறார்கள்.
     நாங்கள் இந்த இடத்திற்கு போய் சேர்ந்த உடன் தினேஷ்  (மாடு) க்கு அப்படி என்ன ஒரு வெறி  வந்ததென்று தெரியவில்லை. அவன் பாட்டுக்கு தட தடவென்று கீழே போட்டிருந்த தடுப்பை பார்த்து ஓட ஆரம்பித்தான். நான் அவனை பார்த்து கத்தறேன், டேய்ய் பார்த்து டா... என்று. அவன் ஓடிய வேகத்துக்கு போய் அந்த தடுப்பை பிடித்தால் அந்த தடுப்பு தாங்குமா என்று வேறு எனக்கு அந்த நேரம் தோன்றி தொலைத்தது.  ஒரு வழியாக அந்த தடுப்பை பிடித்து நின்று விட்டான். யாரும் அதை பார்த்திருந்தால் எவனோ சாவ போறான்டா இன்னிக்கு என்று நினைத்து இருப்பார்கள். எனக்கு வாயில் இருந்து அத்தனை கெட்ட வார்த்தைகள் வந்து விட்டது. எனக்கே அவ்வளவு கெட்ட வார்த்தை தெரியும்ன்றது எனக்கே அபோ தான் தெரிஞ்சது. திட்டி தீர்த்து விட்டேன் அவனை. கரியனும் கபாலியும் அவர்கள் பங்குக்கு நாலு போடு போட்டார்கள். அப்புறம் தான் தெரிந்தது அவன் வேண்டும் என்றே ஓடவில்லை சும்மா இறங்கி போக ட்ரை பண்ணிய போது balance பண்ண முடியாமல் ஓடினான் என்று.
       அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் சுத்தமாக ஆள்  நடமாட்டமே இல்லை.  நாங்களும்  காடும்  குரங்குகளும்  மட்டும் தான்.   வாங்கி வந்த   சாப்பாடு பார்சல் வாசனை  கொஞ்சம் பசியை  தூண்டவே  சாப்பிட்டு  விட்டு  ஏறலாம் என்று சாப்பிட ஒரு இடத்தை தேடினோம். ஏற்கனவே  காடுகளில்  தண்ணீர் இல்லாமல் இரை இல்லாமல் குரங்கு கூட்டம் கொலை வெறியில்   பார்சல் கொண்டு வருபவர்களை எல்லாம் துரத்தி  கொண்டிருந்தது.  இதை பார்த்து உஷாரான நாங்கள் ஒரு இடத்தை select  பண்ணோம். தண்ணீருக்கு நடுவில் ஒரு பெரிய பாறையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். பசி மிகுதியில் நாங்கள் சாதத்தை அள்ளி வாயில் திணித்து கொண்டு இருந்தோம்.  தண்ணீருக்குள் வர முடியாமல் குரங்குகள் எல்லாம் வெளியே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததை மிகவும் மகிழ்ச்சியாய் நாங்கள் வேடிக்கை பார்த்தோம். ஆனால் எங்களுக்கு மேலே இருந்த பெரிய மரக்கிளையை நாங்கள் கவனிக்காமல் விட்டு விட்டோம். அதில் இருந்து குதித்தது ஒரு தடிக்குரங்கு. ஒரு சிறு போரே நடந்தது அதற்கு மேல்.  வேறு எது என்றாலும் விட்டு கொடுத்து செல்ல கூடிய நாங்கள் அந்த பசித்த வேளையில் எங்கள் சாப்பாடை பறிக்க பார்த்ததும் வெறி கொண்டு எழுந்தோம். நாங்கள் போட்ட கூச்சலில், நாங்கள் ஆடிய ஆட்டத்தில், நாங்கள் அந்த பெரிய பாறையில் ஓடிய ஓட்டத்தில் அந்த குரங்கு மிரண்டு தண்ணீரில் எல்லாம் விழுந்து எந்திருச்சு ஓடியது.  சுத்தி நின்ற மற்ற குரங்குகள் அதற்கு பின்னும் எங்களிடம் வந்திருக்குமா என்ன?  இன்னொரு ஆச்சரியமான விஷயம், அதன் பின் நாங்கள் எந்த குரங்கையும் பார்க்கவில்லை.
          ஒரு சின்ன தடுப்பணை தாண்டி  ஒரு ஒற்றையடி பாதை போல நீண்டு செல்லும் பாதையில் ஒரு வழியாக செண்பகாதேவி  அருவிக்கு வந்து சேர்ந்தோம். கரையில் அழகிய கோவில், தடாகம் போன்ற அமைப்பு,  அந்த தடாகத்தில் வந்து விழும் அருவி என அந்த இடம் ரொம்ப ரம்மியமாக  இருந்தது.  இங்கு நேரடியாக அருவியில் குளிக்க முடியாது. ஒரு ஓரமாக தான் சென்று கவனமாக குளிக்க முடியும்.  நல்ல ஆழமான தடாகம் எனவே ரொம்பவே ஜாக்கிரதையா குளிச்சோம்.  சுமார் 1  மணி  நேரத்துக்கும் மேல ஆட்டம் போட்டுட்டு எங்களுக்கே போதும்னு  தோணி கிளம்பினோம். ஆனால் சீசன் நேரங்களில் வந்தால் இவ்வளவு free ஆ எந்த அருவிகள்ளையும் enjoy பண்ண முடியாது.
                         வந்த பாதையிலையே கீழே இறங்கினோம்.  வரும் வழியில் என் கேமரா strap கழன்று, நாங்கள் வேகமா இறங்கிட்டு இருக்கோம், கேமரா எங்களுக்கு முன்னாடி உருண்டு ஓடிட்டு இருக்கு. சரி தான், இன்னிக்கு அது சுக்கு நூறா உடஞ்சிரும், அப்பா கிட்ட மண்டகப்படி வாங்க போறேன்னு நினச்சேன். ஆனா பரவாயில்லை, ஒன்னும் ஆகல.. டாப் மட்டும் எகிருடுச்சு, அதையும் தென்காசில  film develop பண்ற இடத்துல  சரி பண்ணியாச்சு. கீழே மெயினருவி பஜார்ல அல்வா, சிப்ஸ் சாப்பிட்டுட்டு வீட்டுக்கும் கொஞ்சம் வாங்கிட்டு கிளம்பினோம்.  தென்காசில போட்டோ develop பண்ண குடுத்துட்டு  அப்போ  கிடைச்ச 1  மணி நேர gap ல  காசி விஸ்வநாதர்  கோவிலுக்கும்  போய்ட்டு வந்துட்டோம்.   வீட்டுக்கு வந்து சேரும் போது வழக்கம் போலவே எல்லாருக்கும் நல்ல பசி......