Tuesday, November 3, 2009

பள்ளி to கல்லூரி


பள்ளி நாட்கள் ஒரு வழியாக சிற்சில பிரச்சினைகளோடு முடிவுக்கு வந்தது.மார்க் சீட் தாமதமாக வந்ததன் காரணமாகவும் எனக்கு இருந்த கணித பயத்தின் காரணமாகவும் இன்ஜினியரிங் சேரவில்லை.ஆனால் Computer Science தான் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் B.Sc CT சேரலாம் என்று திருச்செங்கோட்டில் உள்ள KSR கல்லூரியில் சென்று விசாரித்த போது CT seats முடிந்து விட்டது ஆனால் BCA seats உள்ளது இரண்டுமே ஓன்று தான் ஒரே value உள்ள கோர்ஸ் தான் என்றும் இன்னும் பல காரணங்கள் சொல்லி (அதெல்லாம் டூப்பு என்று கோர்ஸ் முடிக்கும் போது தான் தெரிந்தது...) வெற்றிகரமாக BCA வில் சேர்ந்தேன்(சேர்த்து விட பட்டேன்).Admission முடிந்தது. என் வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான விஷயமாக Hostel life நுழைந்தது.

இன்னும் 4 நாட்கள் இருந்தது காலேஜ் திறக்க. ஊருக்கு வந்து நண்பர்கள் எல்லார்கிட்டேயும் சொல்லி முடித்தாகி விட்டது.என் நெருங்கிய நண்பர்களில் பொன்ராஜ்,டொமினிக் எல்லாம் ஊரிலயே தான் கல்லூரி படிப்பை தொடர்ந்தார்கள். சந்தோஷ்,சங்கர் ஹோசூர் மற்றும் கோவையில். சரி... இப்போ போயி join பண்ணினா அப்புறம் எப்போ  ஊருக்கு வர போறோம்.அதனால போடு ஒரு plan ன்னு அவசரமா Courtallam plan போட்டோம்.ஆனால் அந்த plan failure.. காலேஜ்கு கிளம்பும் போது தான் அக்கா,அம்மா எல்லாம் எவ்ளோ feel பண்ணிட்டு இருந்தாங்கன்னு தெரிஞ்சது. அண்ணன் கூட போன்ல "காலேஜ் லைப்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.புது நண்பர்கள் கூட எல்லாம் கவனமா பழகு எல்லாத்தையும் விட கொஞ்சம் படி" அப்படின்னு அட்வைஸ்.எங்க வீட்டு சிபி(எங்க pet dog... அதை நாய்ன்னு அம்மாவும் சரி அப்பாவும் சரி சொல்லவே மாட்டாங்க.நானெல்லாம் அதோட அண்ணனாம்.. அது சரி...) கூட பயங்கரமா பீல் பண்ணி என் கூட கொழஞ்சிட்டு இருக்கு... .ஆனா  என் mind ல ஓடிட்டு இருந்தது எல்லாம் புது இடம் புது காலேஜ் புது நண்பர்கள் புது enjoyment அதெல்லாம் விட புது பயணம். சுரண்டைல இருந்து திருச்செங்கோடு 10Hrs ஆகும்.ஒரு முழு இரவு பயணம்.அதுவே எனக்கு ரொம்ப புடிச்சது. கல்லூரி படிப்பு எங்கே நமது ஊரு சுற்றும் ஆசையில் மண் அள்ளி போட்டு விடுமோனு பயந்திட்டு இருந்தப்போ "அஞ்சேல்... நீ  உனது கல்லூரிக்கு செல்வதே ஊர் சுற்றுவதின் ஒரு அங்கம் தான்" என்றது அசரிரீ.


அப்பாவும் கூட வராங்க.இரவெல்லாம் பஸ் பயணம். அப்பா restless ஆக இருந்தாங்க.தெரிஞ்சது.காலையில hostel போய் சேர்ந்து காலேஜ்கு கிளம்பறேன்.அன்னிக்கு சும்மா induction மாதிரி தான்.Claases லாம் எதுவும் நடக்கல. அப்பா hostelல ஓய்வு எடுத்துட்டு சாயங்காலம் அப்பாவை பஸ் ஸ்டாண்டில் விட நானும் ஈரோடு போனேன்.அப்போ  தான் பாக்கறேன் அப்பாவின் கண்களில் கண்ணீரா பொங்கிட்டு இருக்கு.அப்பா அழுது அப்போ தான் நான் பார்க்கறேன்.நல்ல உடம்ப பார்த்துக்கோ, நல்லா படின்னு அவங்களால சொல்லி முடிக்க முடியல.எனக்கு அப்போ தான் நாம வீட்ட விட்டு பிரிஞ்சு வந்துடோம் இனிமேல லைப் இப்படி தான் அப்படின்ற உண்மை உறைக்குது.நானும் அந்த டைம் ல ரொம்ப அழுதிட்டேன். வீட்டுக்கு போன் பண்ணி அம்மா அக்கா கிட்டே பேசும் போதும் ஒரே அழுகையா தான் வந்துச்சு.அடக்கிட்டு, "அப்பா கிளம்பிட்டாங்க காலைல அப்பா வந்த உடனே hostel நம்பர்கு கூப்ப்டுங்க"னு சொல்லிட்டு வச்சிட்டேன்.

இது நடந்தது ஒரு புதன் கிழமை. வெள்ளிகிழமை வந்தது.சனி,ஞாயிறு holidayன்னு வெள்ளிகிழமை சாயங்காலம் circular வந்தது. சனிக்கிமை  காலைல நான் வீட்ல இருந்தேன்.....

1 comment:

vengi said...

pongada koyaaaaaaaango

Post a Comment